fbpx

BB Tamil..!! ’இவர மொத வெளிய அனுப்புங்க’..!! ’பார்த்தாலே எரிச்சலா இருக்கு’..!! குமுறும் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்கள் கொண்டு தொடங்கப்பட்டு இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார். ஆட்கள் குறைந்து கொண்டே போவதால் வீட்டில் சுவாரசியம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். இந்நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் ஒருவரைப் பார்த்தால் ரொம்ப இரிடேட்டாகுது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது அவரது பேச்சு மற்றும் நடவடிக்கை பலருக்கும் எரிச்சல் அடைய செய்துள்ளது.

BB Tamil..!! ’இவர மொத வெளிய அனுப்புங்க’..!! ’பார்த்தாலே எரிச்சலா இருக்கு’..!! குமுறும் ரசிகர்கள்..!!

அதாவது நேற்று கமல் எபிசோடில் ஒரு ரசிகர் மைனா மற்றும் மணிகண்டன் இடையே நட்பை பற்றி பேசி இருந்தார். ஆனால், டாஸ்கிலும் நீங்கள் நட்பாக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதில், மைனா நந்தினி எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதாக நினைத்து எரிச்சல் அடைய செய்கிறார். எப்போதுமே வாக்குவாதம், தேவையில்லாத பிரச்சனையில் மூக்கை நுழைப்பது என தொடர்ந்து அவருக்கு கெட்ட பெயர் தான் கிடைத்துள்ளது. வெளியில் இருந்தவரை ஏதோ விஜய் டிவியில் சில நிகழ்ச்சியில் பங்கேற்று காலத்தை கடத்தி வந்தார். இப்போது தேவையில்லாமல் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பல்பு வாங்கி உள்ளார். இவர் கெடுவது மட்டுமல்லாமல் இவரை சுற்றியுள்ளவர்களையும் இவரது கட்டுப்பாட்டிலேயே வைத்து அவர்களையும் விளையாடவிடாமல் வைத்துள்ளார். இதனால் அவர்களின் தனித்திறமை வெளியில் வராமல் உள்ளது.

BB Tamil..!! ’இவர மொத வெளிய அனுப்புங்க’..!! ’பார்த்தாலே எரிச்சலா இருக்கு’..!! குமுறும் ரசிகர்கள்..!!

ஆகையால், மைனாவை முதலில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என ரசிகர்கள் கோஷமிட்டு வருகின்றனர். எனவே இந்த வார நாமினேஷனில் மைனா நந்தினி இடம்பெற்றால் கண்டிப்பாக இவர் தான் வெளியேறுவார் என பலரும் கூறிவருகின்றனர். இதனால் இன்று நாமினேஷனில் மைனா இடம் பெறுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Chella

Next Post

விக்கி-நயனுக்கு டஃப் கொடுக்கும் நடிகை..!! இத்தனை ஆண்டுகள் பழமையான அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம்..!!

Mon Nov 28 , 2022
கடந்த ஜூன் மாதம் விக்கி-நயன் காதல் திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது இவர்களது திருமணத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில் நடிகை ஒருவரின் திருமணம் நடைபெறு குறித்து சோஷியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பல […]
விக்கி-நயனுக்கு டஃப் கொடுக்கும் நடிகை..!! இத்தனை ஆண்டுகள் பழமையான அரண்மனையில் பிரம்மாண்ட திருமணம்..!!

You May Like