fbpx

பிக்பாஸ் முதல் எலிமினேஷன்..!! வெளியேறினார் உப்புமா மம்மி..? அடுத்த லிஸ்ட்ல இவரும் இருக்காரு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் சாந்தி தான் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வந்த நிலையில், இந்த வாரம் அதிகாரப்பூர்வமாகவே அவர் தான் முதல் எவிக்‌ஷன் என்கிற தகவல்கள் வழக்கம் போல கசிந்துள்ளன.

சாந்தி உடன் சேர்ந்து கூடுதல் இணைப்பாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருந்தால் நல்லா இருக்கும் என எதிர்பார்த்ததை போலவே ஜிபி முத்துவையும் பார்சல் செய்துவிட்டனர். 2-வது வாரத்தில் ஒரே அடியாக இரு வயதானவர்களை வெளியே அனுப்பியது அன்ஃபேர் என்று பிக்பாஸ் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். ஏகப்பட்ட படங்களில் உதவி நடன இயக்குநராக இருந்தவர் சாந்தி. அதன் பின்னர் மெட்டி ஒலி சீரியலில் நடித்த அவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அவர் உள்ளே நுழையும் போதே, முதல் விக்கெட் இவர் தான் என நினைக்கத் தோன்றியது. பிக்பாஸ் வீட்டில் கடந்த 2 வாரங்களாக ரவையை வைத்து வித விதமாக உப்புமா கிண்டி போட்டு வந்த சாந்தி, முதல் ஆளாக எவிக்‌ஷன் மூலம் வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிக்பாஸ் முதல் எலிமினேஷன்..!! வெளியேறினார் உப்புமா மம்மி..!! அடுத்த லிஸ்ட்ல இவரும் இருக்காரு..!!

இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருந்தால் நல்லா இருக்கும் என சொல்லியிருந்த நிலையில், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அசீம் வெளியேறுவார் என்று பார்த்தால், அவரை கமல் மன்னித்து வீட்டுக்குள்ளே வைத்திருக்கிறார். ஆனால், கூடுதல் இணைப்பாக ஜிபி முத்து அவரே தான் வெளியேறுவதாக அறிவித்து விட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மக்களே இப்ப என்னாச்சுன்னா என ஜிபி முத்துவையே நடுவில் உட்கார வைத்து மீம்கள் பறக்கின்றன. இப்படி 2 வயதான போட்டியாளர்களை வெளியே அனுப்பியது ரொம்பவே அன்ஃபேர் என பிக்பாஸ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். நிவாஷினி, ஷெரினா உள்ளிட்ட போட்டியாளர்கள் மிக்சர்கள் தின்று கொண்டிருக்கும் நிலையில், சமைத்துப் போட்ட ஆத்தாவை இப்படி வெளியே அனுப்பிட்டீங்களே என கேட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் முதல் எலிமினேஷன்..!! வெளியேறினார் உப்புமா மம்மி..!! அடுத்த லிஸ்ட்ல இவரும் இருக்காரு..!!

சாந்தி, ஜிபி முத்துவை தொடர்ந்து வீட்டிலேயே வயசான அடுத்த பூமர் அங்கிள் யார் என்று பார்த்தால் அது நம்ம ராபர்ட் மாஸ்டர் தான். ஏற்கனவே மகேஸ்வரியின் தொடையெல்லாம் தெரியுது என பேசி வரும் அவர் தான் அடுத்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அசீமை அதிகம் பேர் நாமினேட் செய்தால், அவருக்கும் ஓட்டுக்கள் வராமல் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க வேண்டும்... அண்ணாமலை பேச்சு

Sun Oct 23 , 2022
தமிழகத்தில் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்தில் கார் இரண்டு துண்டாகி சிதறியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் …தமிழக மாநில […]
பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா அண்ணாமலை..? புதிய தலைவர் இவர்தானாம்..!!

You May Like