fbpx

Bigg Boss 6..!! ’மீண்டும் மக்களிடையே சிக்கிக் கொண்ட அசீம்’..!! ’இந்த வாரம் வெளியே செல்வது இவர்தான்’..!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக, அசீம், ஆயிஷா, ஷெரின், கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று, பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் கமலிடம் நன்றாக வாங்கிக் கொண்டனர். அதை தொடர்ந்து, அனைவரையும் கடுப்பாக்கிய அசல் கோலார், குறைந்த ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், 22ஆம் நாளுக்கான முதல் ப்ரோமோவில், எலிமினேஷன் நாமினீஸ்களை தேர்வு செய்ய, அனைவரும் கன்ஃபெஷன் அறைக்கு சென்று, “ரொம்ப மானிபுலேட் பண்றாங்க, அத்துமீறி பேசுவது பிடிக்கவில்லை, பிரச்சனையை பெரிதுபடுத்துவது பிடிக்கவில்லை , எந்த சண்டையிலும் கலந்து கொள்ள மாட்டிங்குறாங்க” என மற்றவர்களை பற்றிய குறைகளை கொட்டி தீர்த்தனர். 

Bigg Boss 6..!! ’மீண்டும் மக்களிடையே சிக்கிக் கொண்ட அசீம்’..!! ’இந்த வாரம் வெளியே செல்வது இவர்தான்’..!!

அதிகமான குறை கொண்ட போட்டியாளர்களை நாமினேட் செய்வதை வழக்கமாக கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தவாரம் அசீம், ஆயிஷா, ஷெரின், கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோரை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்துள்ளது. இவர்களில் மிக குறைந்து ஓட்டுகளை பெறுபவர், இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார். சற்று நேரத்திற்கு முன் வந்த இரண்டாவது ப்ரோமோவில்,  ஐந்து போட்டியாளர்களில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை பற்றி பேசிவருகின்றனர். இதற்கிடையே, இந்த வாரம் சிங்கப்பூர் மாடல் ஷெரினா வெளியேறுவார் என்று மக்கள் கணித்து வைத்துள்ளனர்.

Chella

Next Post

டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய தினேஷ் கார்த்திக்..!! நடந்தது என்ன..? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Mon Oct 31 , 2022
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது முதுகுவலி காரணமாக பாதியில் வெளியேறினார் தினேஷ் கார்த்திக். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்து திணறிக் கொண்டிருந்த சமயத்தில் தினேஷ் கார்த்திக் களத்திற்குள் வந்தார். அணியை சரிவிலிருந்து […]
டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய தினேஷ் கார்த்திக்..!! நடந்தது என்ன..? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like