fbpx

Bigg Boss 6 Tamil: ’வெள்ளை சட்டைப் போட்ட அரசியல்வாதியா’..? விக்ரமனை சீண்டிய அஸீம்..!! பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் 2-வது ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் வாரம் நட்பு.. அதன் பின் வஞ்சகம்… தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பல பேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் வாரம் ஜிபி முத்து – தனலட்சுமி, நேற்று தனலட்சுமி – அசல் கோலார், விக்ரமன் – அஸீம், விக்ரமன் -ஜிபி முத்து என இந்த வார்த்தை மோதல்கள் ரவுண்டு கட்டி விளையாண்டது. 

Bigg Boss 6 Tamil: ’வெள்ளை சட்டைப் போட்ட அரசியல்வாதியா’..? விக்ரமனை சீண்டிய அஸீம்..!! பரபரப்பு வீடியோ

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் ஆயிஷாவை எதற்கும் தகுதி இல்லை என அஸீம் கூறினார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்த போது அஸீம் ஆயிஷாவை போடி என மரியாதை இல்லாமல் பேச, இருவருக்கிடையே சண்டை நிகழ்ந்தது. இதேபோல் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அஸீம், விக்ரமனையும் தகுதி இல்லை என கூற அவர் நீங்க என்ன வேலைப் பார்த்திங்க என திரும்பி கேட்கிறார். அதற்கு யோவ் நீங்க தான் தூங்கிட்டு இருந்தீங்க. நான் இல்ல என அஸீம் சொல்ல, மரியாதையா பேசுங்க என விக்ரமன் எச்சரிக்கிறார். உடனே அஸிம் டென்ஷனாகி டேய் உன் வேலையை பாருடா போய் என தெரிவிக்க இருவருக்குள்ளும் சண்டை ஏற்படுகிறது.

அப்போது விக்ரமன் அஸிமை பார்த்து பெரிய இளவரசன் மாதிரி வர்ற, போற.. வாடா போடான்னு எல்லோரையும் சொல்லுற என தெரிவிக்கிறார். உடனே அஸிம் வெள்ளை சட்டைப் போட்டா என்னடா பெரிய அரசியல்வாதின்னு சொல்றீங்க… எனக்கு சத்தியமா புரியல என வார்த்தைகளை அள்ளி வீசுகிறார். இதனால் இன்றைய எபிசோடு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Chella

Next Post

Alert..!!! மின் இணைப்பு துண்டிப்பு..!! இந்த மெசேஜ் வந்தால் ஆபத்து..!! பணம் மாயமாகும்..!! டிஜிபி எச்சரிக்கை

Fri Oct 21 , 2022
மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க உடனடியாக தொடர்பு கொள்க என்று ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “மின் கட்டணம் பாக்கி இருப்பதாகவும், அதை செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புகிறார்கள். இதில், ஒரு மொபைல் எண் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த எண்ணை […]
Alert..!!! மின் இணைப்பு துண்டிப்பு..!! இந்த மெசேஜ் வந்தால் ஆபத்து..!! பணம் மாயமாகும்..!! டிஜிபி எச்சரிக்கை

You May Like