fbpx

Bigg Boss 6 Tamil: என்னது ’வாடி போடி’யா..? அஸீமிடம் எகிறும் ஆயிஷா..!! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் வாரம் நட்பு.. அதன் பின் வஞ்சகம்… தொடர்ந்து பழி தீர்த்தல் என போகும் பிக்பாஸ் வீடு இந்த முறை கொஞ்சம் அப்டேட்டாக தினம் தினம் பஞ்சாயத்துடன் தான் விடிகிறது. எபிசோடு ப்ரோமோ வந்தாலே யார் யாருக்கு சண்டை என்ற ஆர்வத்திலே பல பேர் பார்க்கும் அளவுக்கு இருக்கும். அந்த வகையில் முதல் வாரம் ஜிபி முத்து – தனலட்சுமி, நேற்று தனலட்சுமி – அசல் கோலார், விக்ரமன் – அஸீம், விக்ரமன் – ஜிபி முத்து என இந்த வார்த்தை மோதல்கள் ரவுண்டு கட்டி விளையாண்டது. 

Bigg Boss 6 Tamil: என்னது ’வாடி போடி’யா..? அஸீமிடம் எகிறும் ஆயிஷா..!! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..!!

அந்த வகையில், இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் 1 முதல் 13 எண் வரை பட்டியலிட வேண்டும். இதில் விஜே மகேஸ்வரி, சாந்தி, குயின்ஸி, ரச்சிதா, ஏடிகே, விக்ரமன், ஷெரின் ஷாம்,ஜனனி, ஆயிஷா, ராம் ராமசாமி, அசல் என அனைவரும் 1ல் இருந்து வரிசையாக நிற்கிறார்கள். அப்போது அஸீம் முன்னால் வந்து விஜே மகேஸ்வரி, விக்ரமன், ஆயிஷா ஆகியோரை குறிப்பிட்டு தகுதி இல்லாத நிறைய பேர் இங்க நிக்குறாங்க. குறிப்பாக ஆயிஷாவுக்கு சுத்தமா தகுதி இல்ல என சொல்கிறார். 

உடனே தகுதியில்லன்னு என்ன அடிப்படையில சொல்றீங்க என கேட்க, நீ தூக்கத்தை தவிர என்ன பண்ண என ஆயிஷாவிடம் அஸீம் எகிறுகிறார். நீங்க மட்டும் தூங்கலையா என ஆயிஷா கேட்க, கத்தி பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் என கூறிவிட்டு பதிலுக்கு அவரும் கத்துகிறார். எனக்கு வாய்ஸ் இருக்கு நான் பேசுறேன் என ஆயிஷா சொல்கிறார். உனக்கு சவுண்டு இருக்குன்னா எனக்கும் தான் இருக்கு போடி என அஸீம் கோபப்படுகிறார். உடனே ஏன் வாடி போடின்னு பேசுறீங்க.. நான் வாங்க போங்கன்னு தானே உங்களை பேசுறேன் என ஆயிஷா அஸீமிடம் சண்டைக்கு செல்வது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

Chella

Next Post

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த 60 வயது முதியவர்..!! தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரம்..!!

Fri Oct 21 , 2022
அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு 17 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் திருமணமாகி கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அமைந்தகரை சேர்ந்த 60 வயதான முருகானந்தம் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு அந்தப் பெண் தனியாக இருந்த நிலையில், குடிபோதையில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து […]

You May Like