fbpx

Bigg Boss | பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார் பிரபல நடிகை..!! அப்படினா இந்த சீரியல் முடியப்போகுதா..?

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்திருக்கிறது. தற்போது 7-வது சீசன் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. செட் அமைக்கும் பணிகள் ஒருபக்கம் நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்த சீசனில் 2 பிக்பாஸ் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கயல் சீரியலில் கயலின் தோழியாக நேர்ஸ் வேலை பார்க்கும் அன்னபூரணி, பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பார்வையற்ற ஆசிரியையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

பாஜக தலைவர் சுட்டு கொலை….! போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பு…!

Mon Aug 14 , 2023
ஜார்கண்ட் மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் மர்மநபர்களால், சுட்டு கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில், லதேஹர் ஜிவா பரிஷத்தின் முன்னாள் துணைத் தலைவரான ராஜேந்திர பிரசாத் சாஹு என்பவர், கடந்த சனிக்கிழமை மாலை பாலுமத் பகுதியில் உள்ள டூன் பள்ளிக்கு அருகே நின்று […]

You May Like