பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து இளைஞர்களை ஈர்த்த ஷிவானி நாராயணன், பிக்பாஸ் சீசன் 4-இல் போட்டியாளராக கலந்துகொண்டார். இதன் மூலம் மேலும் புகழ்பெற்ற ஷிவானி, அதற்குப்பிறகு சீரியல்களுக்கு டாட்டா கட்டிவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்திருந்தார். அதன் பின் தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரள லாட்டரி பற்றிய இந்த கதையில் ஷிவானி நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிவானி எப்போதும் இன்ஸ்டாகிராமில் அதிகம் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்பவர். மேலும் அவரது டான்ஸ் வீடியோக்களும் வைரல் ஆகும். தற்போது ஷிவானி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவருக்கு திருமண வாழ்த்தே சொல்ல தொடங்கிவிட்டார்கள். இருப்பினும் இது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனவும் தெரியவந்திருக்கிறது.