fbpx

’பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட் வந்தாச்சு’..!! ஜிபி முத்துவின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பெரும்பாலும் அந்த சேனலில் உள்ள தொகுப்பாளர்களோ அல்லது நடிகர் நடிகைகளோ பங்கேற்பர். பிக்பாஸ் பார்க்கும் மக்கள், இதை ஒரு குறையாக சொல்லிக்கொண்டு இருந்தனர். அதனால், இம்முறை போட்டியாளர்களை வெளியே இருந்து தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த போட்டியாளர்கள் பெறும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகிவுள்ளது.

’பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட் வந்தாச்சு’..!! ஜிபி முத்துவின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்..!!

1. ஜிபி முத்து – டிக்டாக் மற்றும் யூடியூப் பிரபலம் ஜிபி முத்துவின் ஒரு நாள் சம்பளம், ரூ.15,000 – ரூ18,000 என பேசப்படுகிறது.

2. நடிகர் அசீம் – அனைத்து சேனல்களில் சீரியல் நடித்து வரும் அசீமின் ஒரு நாள் சம்பளம், ரூ22,000 – ரூ.25,000 என கூறப்படுகிறது.

3. அசல் கோலார் – ஜோர்தால பாடல் மூலம் பிரபலமாகிய அசலின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ.18,000 என சொல்லப்படுகிறது.

4. ஷிவின் கணேசன் – திருநங்கையாகிய ஷிவினுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ18,000 என பேசப்படுகிறது.

5. ராபர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர் மற்றும் சிம்புவின் நெருங்கிய நண்பராகிய ராபர்ட்டுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 – ரூ.27,000 என கூறப்படுகிறது.

6. மைனா நந்தினி – லேட்டஸ்டாக வருகை தந்த விஜய் டிவியின் செல்லப்பிள்ளை நந்தினுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.20,000 – ரூ.25,000 என சொல்லப்படுகிறது.

7. ராம் ராமசாமி – கிரிக்கெட் மற்றும் சினிமா ஆகிய இரு துறைகளில் கலக்கும் ராமிற்கு ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ. 22,000 என பேசப்படுகிறது.

8. ஏடிகே – இசைப்புயலின் இசையில் வெளியான கடல் மற்றும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் பாடிய ராப் சிங்கர் ஏடிகேவின் ஒரு நாள் சம்பளம் ரூ.16,000 – ரூ.19,000 ஆகும் 

9. அமுதவாணன் – விஜய் டிவியில் ஆதிகாலத்திலிருந்து பணிபுரியும் அமுதவாணனின் ஒரு நாள் சம்பளம் ரூ.23,000 – ரூ.27,000 ஆகும் 

10. விஜே கதிர் –  மியூசிக் சேனலில் தொகுப்பாளரான கதிருக்கு ஒரு நாள் ரூ.18,000 – 20,000 என கூறப்படுகிறது.

11. ஆயிஷா – அராத்து பெண்ணாக சத்யா நாடகத்தின் பிரபலம் ஆயிஷாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.28,000 – ரூ 30,000 ஆகும்.

12. தனலட்சுமி – மக்களில் ஒருவராக களம் இறங்கிய தனலட்சுமியிமின் ஒரு நாள் சம்பளம் ரூ.11,000 – ரூ.20,000 என சொல்லப்படுகிறது

13. ரச்சிதா – சரவணன் மீனாட்சி பிரபலம் ரச்சிதாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 – ரூ. 28,000 என கூறப்படுகிறது.

14. ஜனனி – லாஸ்லியாவிற்கு பின், இலங்கையில் இருந்து பிக்பாஸில் பங்குபெற்ற ஜனனியின் ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 – ரூ.26,000 வரை என கூறப்படுகிறது.

15. விஜே மகேஸ்வரி – பிரபல தொகுப்பாளினி மற்றும் பட நடிகையாகிய மகேஸ்வரியின் ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 – ரூ. 23,000 வரை என கூறப்படுகிறது.

16. நிவா – மாடல் அழகி மற்றும் ஆடை வடிவமைப்பாளரான நிவாவின் ஒரு நாள் சம்பளம் ரூ.12,000 – ரூ.18,000 வரை என கூறப்படுகிறது.

17. குயின்ஸி – நாடக நடிகை குயின்ஸியின் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ.20,000 வரை என கூறப்படுகிறது.

18. விக்ரமன் – பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் வாதியான விக்ரமனின் ஒரு நாள் சம்பளம் ஒரு நாள் சம்பளம் ரூ.15,000 – ரூ. 17,000 வரை என கூறப்படுகிறது.

19.சாந்தி – நடனகலைஞர் மற்றும் நாடக நடிகை சாந்தியின் ஒரு நாள் சம்பளம் ரூ.21,000 – ரூ. 26,000 வரை என கூறப்படுகிறது.

20. மணிகண்டன் – ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டனின் ஒரு நாள் சம்பளம் ரூ.18,000 முதல் 24,000 வரை என கூறப்படுகிறது.

21. ஷெரினா – பிரபல மாடல் அழகி ஷெரினாவின் ஒருநாள் சம்பளம் ரூ.23,000 முதல் 25,000 வரை என கூறப்படுகிறது.

’பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட் வந்தாச்சு’..!! ஜிபி முத்துவின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

20 நபர்கள் பிக்பாஸ் வீட்டினுள் இருக்க, இந்த வாரம் ஒரு நபர் நிச்சயம் எலிமினேட் செய்யப்படுவார். ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்ஸி, ரச்சிதா, ராம் ராமசாமி, சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில், யார் இருப்பதிலே குறைந்த ஓட்டுகளை பெறுகிறார்களோ அவர்களே, எலிமினேட் செய்யப்படுவார்கள். பொதுவாக, முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளர், ஒரு மாதத்திற்கு பிறகுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார். ஆனால், இம்முறை யாரும் வெளியே செல்லாத நிலையில், மைனா நந்தினி உள்ளே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தமிழக அரசு வேலை… டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…! நாளை தான் இறுதி நாள்...

Wed Oct 19 , 2022
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌, தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில்‌ உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வட்டார இயக்க மேலாளர்கள்‌ & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]

You May Like