fbpx

‘Bigg Boss Season 6’..!! தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள்..!! இந்த லிஸ்ட்ல இவரும் இருக்காரா..?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆண்டுதோறும் வரும் பண்டிகைகள் போல, ஆண்டுக்கு ஒரு முறை தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாள் உண்டு. விஜய் டிவியில் தொடங்கிய நாள் முதல், ஒவ்வொரு சீசனும் பெரிய ஹிட் அடித்திருந்தது. கடந்த முறை சீசன் 5 வரை பொதுமக்கள் மத்தியில் பெரிய பிரபலமானது. போதாக்குறைக்கு பிக்பாஸ் அல்டிமேட் என்கிற சீசனும் தொடங்கப்பட்டு, அதுவும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. பிக்பாஸ் அல்டிமேட் சீசன் முதல், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் புதிய முறையை விஜய் டிவி கொண்டு வந்தது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர ஒளிபரப்பை தொடங்கிய அந்நிறுவனம், தமிழ் மட்டுமின்றி பிற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் 24 மணி நேர ஒளிபரப்பாக மாற்றியது. 

'Bigg Boss Season 6'..!! தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள்..!! இந்த லிஸ்ட்ல இவரும் இருக்காரா?

வரவிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் 24 மணி நேர ஒளிபரப்பாகவே இருக்கும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் 9ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், போட்டியாளர்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட யூகங்களின் அடிப்படையில் யார் அவர்கள் என்பது கசிந்து வந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஒவ்வொரு சீசன் வரும் போது இது தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ஆனால், யூகங்களிலும், சில ஆதாரங்களின் அடிப்படையில் வெளியாகும் பட்டியல் பெரும்பாலும் ஒத்துப் போயிருக்கிறது. இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது. அந்த வகையில் போட்டியாளர்கள் பற்றிய விவரம் வெளியாகியிருக்கிறது.

'Bigg Boss Season 6'..!! தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள்..!! இந்த லிஸ்ட்ல இவரும் இருக்காரா?

ஜி.பி.முத்து

Fatman ரவீந்தர்

நடிகை ஷில்பா மஞ்சுநாத்

விஜய் டிவி மைனா

பாடகி ராஜலட்சுமி

சீரியல் நடிகை ஆயிஷா

VJ மகேஸ்வரி

அமுதவானன்

மதுரை முத்து

டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்

நடிகை விசித்ரா

சீரியல் நடிகை ஸ்ரீநிதி

மணிகண்டன் (ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பி) 

ஆகியோர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் அதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டில் அவர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உள்ள சிலர், கடந்த ஆண்டே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை. இந்த ஆண்டும் இவர்கள் பெயர் வந்துள்ளது. காத்திருப்போம்..!!

Chella

Next Post

ஆயுத பூஜையன்று அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை..!! வாடிய முகத்துடன் இல்லத்தரசிகள்..!!

Tue Oct 4 , 2022
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவது உண்டு. அந்த வகையில், இன்று ஆயுதபூஜை தினத்தன்று தங்கம் விலை மேலும் அதிகரித்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 […]

You May Like