விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், புதிதாக தொடங்கப்பட்டு 11 எபிசோடுகள் மட்டுமே முடிந்துள்ள நிகழ்ச்சி ஒன்று முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில், புதிய Content உடன் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், தன்னுடைய நக்கல் நையாண்டி பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ராஜூ ஜெயமோகனை வைத்து புதிதாக “ராஜூ வூட்டுல பார்ட்டி” என்ற நிகழ்ச்சி ஒன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் சீரியல் நடிகர்கள் கலந்து கொண்ட நிலையில், அதன் பின் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி நல்ல ஒரு காமெடி நிகழ்ச்சியாக இருந்தாலும், இதுவரை 11 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்நிலையில், அக். 9 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருப்பதால் இந்நிகழ்ச்சியை முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவு ஒன்றை ராஜூ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த நிகழ்ச்சியை ரசிக்கும் படியாக அமைத்து கொடுத்த கலைஞர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி முடிந்த கையோடு அவர் தனது மனைவி உடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. மேலும், அவர் இனி சின்னத்திரைக்கு வரமாட்டார் எனவும், இனி வெள்ளித் திரையில் அவரை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய நீண்ட நாள் கனவான வெள்ளித்திரையில் நடிக்க அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும் தொடங்கப்பட்ட சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர்.