ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று தொடங்க இருக்கிறது.
தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், பிரியங்கா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து, சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று துவங்குகிறது. இதற்கிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6… போட்டியாளர்கள் விவரம்…
1. ஜி.பி. முத்து – டிக்டாக் மூலம் பிரபலமாகி யூடியூபில் கலக்கி, தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
2. அசீம் – சின்னத்திரை
3. ஷிவின் கணேசன் – மாடலாக இருப்பவர். மிஸ் இந்தியா திருநங்கை பட்டம் வென்றவர்.
4. ராபர்ட் மாஸ்டர் – நடன இயக்குனர்
5. ஷெரினா – சினிமா நடிகை, தொழிலதிபர்
6. ராம் ராமசாமி – பிரபல மாடல்
7. தினேஷ் கனகரத்தினம் – இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர்
8. ஜனனி – ஊடகத்துறையில் பணியாற்றுபவர்
9. அமுதவாணன் – காமெடி நடிகர்
10. மகேஷ்வரி – வி.ஜே.யாக அறிமுகம் ஆனவர். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்.
11. கதிரவன் – பிரபல மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர்
12. ஆயிஷா – சின்னத்திரை நடிகை
13. மணிகண்டன் ராஜேஷ் – நடிகை ஐஷ்வர்யா ராஜேஷின் சகோதரர், சின்னத்திரை நடிகர்
14. சாந்தி அரவிந்த் – நடிகை, நடன இயக்குனர்