தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் கோலாகலமாக தொடங்கி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து விரைவில் 7-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, பிக்பாஸ் தொடங்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், இந்த 7 சீசனில் தனது சம்பளத்தை ரூ.130 கோடியாக கமல்ஹாசன் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிக்பாஸ் குழுவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக ஆடிஷனில் பங்கேற்ற 5 பிரபலங்கள் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
1. ரேகா நாயர்
2. மாகப ஆனந்த்
3. உமா ரியாஸ்கான்
4. விஜே பாவனா
5. கே பி ஒய் சரத்
இந்த 5 பிரபலங்களும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.