fbpx

அடுத்த மாதம் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 7..? இந்த முறை கமல் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..?

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் இந்நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் முதல் 3 சீசனில் ஆரவ், ரித்விகா, முகென் ராவ் ஆகியோர் டைட்டில் வின்னர்கள் ஆகினர். கடைசியாக நடந்து முடிந்த 3 சீசன்களில் ஆரி, ராஜு மற்றும் அசீம் ஆகியோர் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றனர். இந்நிலையில், தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி அக்டோபர் மாதம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு முழுவதுமாக குறைந்துவிட்டதால், மீண்டும் இந்த ஆண்டு முதல் பழையபடியே ஜூலை மாதத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் படு ஜோராக நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசனின் சம்பளம் விவரம் தெரியவந்துள்ளது. கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய கமல், தற்போது 7-வது சீசனை தொகுத்து வழங்க ரூ.130 கோடி சம்பளம் பேசி உள்ளாராம். முதலில் ரூ.100 கோடி சம்பளம் தருவதாக பிக்பாஸ் குழு கேட்டதற்கு முடியவே முடியாது என டீல் பேசி ரூ.130 கோடி சம்பளத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறாராம்.

Chella

Next Post

இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் ரூ.24000 கோடி..!

Sun Jun 18 , 2023
இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இத்துறைக்கு முக்கிய தேவையான செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலைகள் இந்தியாவில் இல்லாத காரணத்தால் இத்துறை வேகமாக வளர்ச்சி அடைய முடியாத நிலையில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் சிப் தயாரிப்பு மற்றும் டெஸ்டிங்-கிற்கு வெளிநாடுகளை தான் நம்பியுள்ளது. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வரும் வேளையில், அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் […]

You May Like