fbpx

பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்..!! விஜய் டிவி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! குஷியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஷோ என்றால், அது பிக்பாஸ் தான். 100 நாட்கள் எவ்வித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு தங்களுடன் விளையாடும் போட்டியாளர்களுடன் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது.

இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், தற்போது 7-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், சீசன் 7-இல் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியலை நெட்டிசன்கள் கணித்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் டிவி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “இன்று இரவு 7 மணி 7 நிமிடத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது. காத்திருக்கவும்” என மொட்டையாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், அவர்கள் வெளிப்படையாக பிக்பாஸ் எனக் குறிப்பிடாவிட்டாலும் 7 என்ற எண்ணை வைத்து அது பிக்பாஸ் சீசன் 7 அப்டேட் தான் என ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

எனவே இன்று இரவு 7 மணிக்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் எனறு தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

NEET Exam | ’நீட் தேர்வு கட்டாயம் தேவை’..!! யூடியூப் வீடியோவை மட்டுமே பார்த்து தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை மாணவன்..!!

Fri Aug 18 , 2023
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் அறிவு நிதி, யூடியூப் வீடியோவை பார்த்தே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவரின் பெற்றோர் கூலித் தொழிலாளிகள் தான். புத்தகம் கூட வாங்கி படிக்கக் கூட முடியாத நிலையில், இருந்த இந்த மாணவன், கடும் முயற்சியால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். பயிற்சி மையத்தில் சேரும் அளவுக்கு இவரிடம் காசு இல்லை. யூடியூப் வீடியோக்களை பார்த்து நீட் தேர்வுக்கு […]

You May Like