விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் குறித்த பேச்சு தற்பொழுது இணையத்தில் அதிகமாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றது. அந்த வகையில், இம்முறை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் 2 சீரியலில் நடித்த நடிகை ரவீனா தாஹா , நடிகை ரித்திகா, மாகாபா ஆனந்த் எனப் பல பிரபலங்கள் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதோடு அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆரம்ப நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் ஓவியா, அசீம், சாண்டி மாஸ்டர் மற்றும் ஆரி ஆகியோர் கலந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.