fbpx

அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் – 6..? மீண்டும் வருகிறார் கமல்..! போட்டியாளர்கள் இவர்கள்தான்..!

பிக்பாஸ் சீசன் – 6 எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்த ஒரு உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டுடன் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6வது சீசனுக்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் 5 சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கிய நிலையில், ஓடிடியில் தொடங்கப்பட்ட ’பிக் பாஸ் அல்டிமேட்’ -ஐ சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில், பிக்பாஸ் 6 -ஐ தொகுத்து வழங்கப் போவது யார்? என்கிற ஒரு கேள்வி ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் விஜய் டிவி, கமலிடம் 6-வது சீசனைத் தொகுத்து வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, கமல் தொகுத்து வழங்குவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல்களும் கசிந்துள்ளன.

அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் - 6..? மீண்டும் வருகிறார் கமல்..! போட்டியாளர்கள் இவர்கள்தான்..!

அது என்னவென்றால், பிக்பாஸ் சீசன் – 6 வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தொடங்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த சில தினங்களில் கமல் புரொமோ ஷூட்டுக்குக் கிளம்புவார் என்று தெரிகிறது. அப்போது சீசன் 6 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சேனலில் இருந்து வெளியாகலாம் என கூறப்படுகிறது. 5 சீசன்களிலும் ஐந்தாவது சீசனே வரவேற்பு குறைந்த சீசன். காரணம் அந்த சீசனின் போட்டியாளர்கள்தான் என சேனல் நினைப்பதாகவும், அதனால் இந்த முறை போட்டியாளர்கள் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் - 6..? மீண்டும் வருகிறார் கமல்..! போட்டியாளர்கள் இவர்கள்தான்..!

அதாவது சர்ச்சைக்குப் பெயர் போனவர்கள் அதிகப்படியான அளவில் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படலாம் என சேனல் தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இவர்கள்தான் பிக்பாஸ் சீசன் – 6இன் போட்டியாளர்கள் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் சில பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் சிம்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு பரபரப்புக் கிளப்பிய நடிகை ஸ்ரீநிதி பெயரும் அடிபடத் தொடங்கி இருக்கிறது. விரைவில் அடுத்தடுத்த போட்டியாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

Chella

Next Post

’ஓபிஎஸ் தரப்பு இவ்வாறு செய்தது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல்’..! நீதிபதி கண்டனம்

Thu Aug 4 , 2022
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையில், நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகாரளித்தது குறித்த ஓபிஎஸ் தரப்புக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். ஜூலை 11ஆம் தேதி […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like