பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர்-ரச்சிதா கெமிஸ்ட்ரி பற்றி பல தகவல்களை போட்டு உடைத்திருக்கிறார் வனிதா.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து, ஒவ்வொரு எபிசோடும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. உள்ளே நடக்கும் பரபரப்புகளை அரசியல் நிகழ்வுகளை ஆராய்வதை போல, முன்னாள் போட்டியாளர்கள், நிகழ்ச்சி பார்வையாளர்களை வைத்து, இணையதளங்கள் விவாத நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் இணையதளம் ஒன்றுக்கு பிக்பாஸ் எபிசோட் பற்றி தினமும் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில், ஒரு எபிசோடு குறித்து பேசிய வனிதா, ராபர்ட் மாஸ்டர்-ரச்சிதா கெமிஸ்ட்ரி பற்றி பல தகவல்களை போட்டு உடைத்திருக்கிறார்.
”ராபர்ட்-ரச்சிதா மேட்டர்ல ஷிவின்-ஷெரினா பத்தி பேசனும்.. ஷிவின் எதுக்கு இதுல ஏன் உள்ள வர்றாங்கனு புரியல. சத்தியமா எனக்கு சுத்தமா பிடிக்கல. ஷெரினா பொருத்தவரை டேக் டைவர்சன் தான். அசீம் மாதிரி அவங்களும் போக்கைஸ டீ போக்கஸ் பண்ணனும். அது அசீம் மாதிரியான தந்திரம் தான். உண்மையான போக்கஸ் பண்ண வேண்டியது ராபர்ட் மாஸ்டர் தான். அதே பிக்பாஸ் வீட்டில் 22 வயதில் எனக்கு கேர்ள் ப்ரெண்ட் இருக்காங்கனு கமல் சார் முன்னாடி தான் ராபர்ட் சொன்னார். கேமரா முன்னாடி பேசல. அப்படி இருக்கும் போது, ராபர்ட்-ரச்சிதா உள்ளே என்ன பண்றாங்க? இது தேவையா? ரச்சிதா ப்ளே பண்றாங்க. அவங்க வலை விரிக்கிறாங்க; வலையில் விழவில்லை. ரச்சிதா வலையை விரிக்கிறார். ரச்சிதா, இதில் பகடை காய் கிடையாது. நிவா விழுந்தாள். ஆனால், ரச்சிதா விழவில்லை. அவங்க கேம் ஆடுறாங்க; இப்போ தான் அவங்க கேம் ஆரம்பமாயிருக்கு.
நாம் சொல்வது தவறாக கூட இருக்கலாம். ஆனால், நமக்கு ஒரு ஜட்ஜ்மெண்ட் இருக்கு. நானும் அந்த வீட்டில இருந்திருக்கேன். ரச்சிதாயோட வலையில், மாட்டப் போவது ராபர்ட் தான். இதில், ஷிவின் , ஷெரினா சும்மா டைவர்சன். வெளியில் ஒரு கேர்ள் ப்ரெண்ட் இருக்கும் போது, உள்ளே என்ன? அவங்க இரண்டு பேரும் சும்மா இருக்கும் போது, இந்த ஷவின், ஷெரினா எதுக்கு வம்பா போய்,‛ சொல்லுங்க மாஸ்டர்…’னு சொல்றது. பதிலுக்கு ரச்சிதா, ‛நான் சாப்பிடல…’னு சொல்றது. ‛ஏன் சாப்பிடல…’னு ராபர்ட் சொல்றது. விட்டா ஊட்டி விடுறது. ப்ரெண்ஷிப்ல இது தவறில்ல. ஆனால், அவங்க அப்படி நடக்கல. இரண்டு பேரும் சிங்கிளாக இருக்காங்க. இந்த விவகாரம் இதுக்கு முன்னாடியும் நடந்திருக்கு. லாஸ்லியா-கவின் பத்தி நான் பேசியிருக்கிறேன். ஏன்னா, அவங்க ரெண்டு பேருக்கும் அப்போ வெளியே யாரும் இல்லை. அதனால் ஒரு ஈர்ப்பு வர்றது தப்பில்ல. அதே நேரத்தில் தர்ஷன்-ஷெரின் ஒரு விசயம் வரும் போது, தர்ஷனுக்கு வெளியே ஒரு பொண்ணு காத்திட்டு இருந்தா. நான் வெளியே வந்த போது, அவன் என்னிடம் வந்து பேசினாள்.
அப்படி பார்க்கும் போது, ராபர்ட்-ரச்சிதா விஷயத்தில் ஷிவின் செய்யுறது ரொம்ப ரொம்ப தப்பு. ஷெரினா செய்யுறது டேக் டைவர்சன். அந்தம்மா ஒரு நடிகர் திலகம். ரச்சிதா கேம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. உண்மையான கோபம் இருக்கிறவங்க, சாப்பிட கேட்கும் போது, ‛நீ யாரு என்னை சாப்பிட சொல்ல’ என்று தானே கேட்க வேண்டும். ஆனால், நடிப்புக்கே நடிப்பா இருக்கு. வெளியில் இருந்து பார்க்கும் போது, மிஸ் லீடிங் பண்ற மாதிரி இருக்கு. ஷிவினுக்கு நல்ல பேரு இருக்கு. மரியாதை இருக்கு. எதுக்கு தேவயில்லாமல் இதுக்குள்ள ஷிவின் வர்றாங்கன்னு தெரியல,’’ என்று வனிதா அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு முன், ராபர்ட் மாஸ்டருன் வனிதாவுக்கு நெருக்கம் இருந்ததை அனைவரும் அறிவர் என்பது குறிப்பிடத்தக்கது.