fbpx

ரத்தம் தெறிக்கும் ’தங்கலான்’ மேக்கிங் வீடியோ..!! விக்ரம் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த படக்குழு..!!

கோலிவுட் ரசிகர்களால் சீயான் எனக் கொண்டாடப்படும் விக்ரம், இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், விக்ரம் ரசிகர்களுக்காக தங்கலான் படக்குவினர் தரமான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

விக்ரம் நடிப்பில் இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2, தங்கலான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. முக்கியமாக பொன்னியின் செல்வன் 2 வரும் 28ஆம் தேதி ரிலீஸாகிறது. இன்னொரு பக்கம் விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது தங்கலான் படக்குழு. பா ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் தங்கலான் திரைப்படம், பீரியட் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. விக்ரம் – பா ரஞ்சித் காம்போ முதன்முறையாக இணைந்துள்ளதால், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான தங்கலான் மேக்கிங் க்ளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது. ஜிவி பிரகாஷின் மிரட்டலான பின்னணி இசையுடன் தொடங்கும் இந்த மேக்கிங் வீடியோ, ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

1.50 நிமிடங்கள் வரை ஓடும் இந்த மேக்கிங் வீடியோ முழுவதும் அதிரடியான போர் காட்சிகளுடன் கூஸ்பம்ப் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கிறது. முக்கியமாக விக்ரமின் லுக், அவரது பாடி லேங்குவேஜ் என எல்லாமே வித்தியாசமாக உள்ளது. பீரியட் ஜானர் படம் என்பதால், ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் பா ரஞ்சித். மேக்கிங் வீடியோவே இப்படி இருந்தால், தங்கலான் படம் முழுவதும் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். பா ரஞ்சித் ரத்தமும் சதையுமாக ஒரு படத்தை இயக்கி வருவது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

Chella

Next Post

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! இனி ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அபராதம்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Mon Apr 17 , 2023
சாலை விபத்துக்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தில், தற்போது உள்ள அபராதத்தை விட பன்மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தாலும் நீங்கள் ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டியது வரும். தற்போதெல்லாம் ஹெல்மெட் அணிவதற்கு கூட போக்குவரத்து காவலர்கள் அபராதம் போடுவதை பார்க்க முடியும். இந்நிலையில், புது போக்குவரத்து விதிகளின் […]

You May Like