fbpx

பாடி ஷேமிங்..!!! கோலாரால் வந்த கோளாறு..!! எகிறிய தனலட்சுமி..!! பரபரப்பில் பிக்பாஸ் வீடு..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் கோலார் – தனலட்சுமி இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தனலட்சுமி மீது நெகட்டிவ் விமர்சனங்கள் விழ தொடங்கியது. முதல் வாரமே ஜிபி முத்துவிடம் வம்பிழுத்தது, கமலிடம் விமர்சனம் பெற்றது என அவர் , கதை சொல்லும் டாஸ்க்கில் அனைவரையும் அழ வைக்கும் அளவிற்கு அம்மா சென்டிமென்ட் கதை சொன்னார். அதனால், அவரை நாமினேஷன் ஃப்ரீ பிராஸசிற்கு சக போட்டியாளர்கள் அழைத்து சென்றனர். அதேசமயம் நிகழ்ச்சியில் 2வது போட்டியாளராக உள்ளே வந்த அசல் கோலார் கடும் சர்ச்சையில் சிக்கினார். சக பெண் போட்டியாளரை அவரின் அனுமதியின்றி தொட்டு தொட்டு பேசுவது, திட்டினாலும் இதே வேலையை தொடர்வது என கோளாறான பல வேலைகளை அசல் செய்தார். இதன் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனால், யாரிடம் இவர் திட்டு வாங்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு தனலட்சுமி பிள்ளையார்சுழி போட்டுள்ளார். 

பாடி ஷேமிங்..!!! கோலாரால் வந்த கோளாறு..!! எகிறிய தனலட்சுமி..!! பரபரப்பில் பிக்பாஸ் வீடு..!!

அந்த சண்டையில் உனக்கே இவ்வளவு தைரியம் இருக்கும்ன்னா, எனக்கு எவ்வளவு இருக்கும் என்ற அளவுக்கு நேருக்கு நேர் மல்லுகட்டினார். தலைவர் ஜிபி முத்து தனலட்சுமி விஷயம் என்பதால் உள்ளே வரவில்லை. அசீம், ராம் ராமசாமி உள்ளிட்டோர் இருவருக்குமிடையேயான சண்டையை தடுக்க முயன்றனர். அப்போது தனலட்சுமி, “நான் இவனை அண்ணான்னு கூப்பிட்டா.. என் அப்படில்லாம் கூப்பிடுறன்னு கேட்டுட்டு என்ன பார்த்து பெரியம்மான்னு சொல்றான். பாடி ஷேமிங் பண்றான். இதேபோல நான் டாஸ்க் பேசிட்டு வெளியே வந்ததும் பேசவே விட்டுருக்க கூடாது. பாம் பாம் அடிச்சி வெளியே அனுப்பிருக்கணும் என அசிங்கமா சொல்றான். 

பாடி ஷேமிங்..!!! கோலாரால் வந்த கோளாறு..!! எகிறிய தனலட்சுமி..!! பரபரப்பில் பிக்பாஸ் வீடு..!!

உடனே அசல் நீ, வா போன்னு என்னைப் பார்த்து சொல்ற என கேட்டதுக்கு, நீ மட்டும் என்ன வா, போ என்று தானே சொல்ற. அதுமட்டுமல்ல என்னை பார்த்து ஆன்ட்டின்னு சொல்ற. நீ சோறு போடுறியா. உனக்கென்ன வலிக்குது. நான் எப்பிடியோ இருந்துட்டு போறேன். உனக்கென்ன வலிக்குது என சரமாரியாக கேட்கிறார் தனலட்சுமி. அப்போது சிலர் இது பிராங்க் என சொல்ல, பின்னாடி இருந்து ஒரு போட்டியாளர் சண்ட போடுறதுன்னா உண்மையா சண்டை போடுங்கப்பா என தெரிவிக்கிறார்.

Chella

Next Post

தொடர்ந்து குறையும் தங்க விலை.. தீபாவளி நாட்களில் ஓவர் குஷியில் இல்லத்தரசிகள்.!

Thu Oct 20 , 2022
கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது. ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், ஒரு சவரனுக்கு Rs 120-ம் குறைந்டுள்ளது. இது வெள்ளியின் விலையும் கடந்த 2 […]

You May Like