fbpx

பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் மகள் காதலரை கரம்பிடிக்கின்றார்!!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் இரா கானுக்கும், அவரது காதலருக்கு பிரம்மாண்டமான நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது.

நடிகர் அமீர் கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். தற்போது இரா கானுக்கும்… அவருடைய காதலருக்கும் தான் மிக பிரமாண்டமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா,  நுபுர் ஷிக்கரே என்பவரை காதலித்து வந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன், இந்த திருமண நிச்சயதார்த்தம் தற்போது பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்தில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனும் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதே போல் கடந்த ஆண்டு அமீர் கானிடம் இருந்து விவாகரத்து பெற்ற, அமீர் கானின் இரண்டாவது மனைவியான கிரண் ராவும் கலந்து கொண்டுள்ளார். இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் அவ்வப்போது பிறந்தநாள் பார்ட்டி, குடும்ப விசேஷங்களில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இரா மற்றும் நுபுர் ஆகியோர் நண்பர்களாக இருந்தாலும், அவரை காதலிக்க துவங்கிய பின்பு அவ்வப்போது… இருவரும் சேர்ந்து டேட்டிங் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இரா கான்.

சமீபத்தில் நடந்து முடிந்த இராவின் பிறந்தநாள் பார்ட்டியில் தன்னுடைய காதலருடன் காதலர் மற்றும் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகியது. அதே போல் சைக்கிள் வீரரான நுபுர் போட்டியில் கலந்து கொண்ட பின் இராவுக்கு முத்தம் கொடுத்து, அவருக்கு மோதிரம் மாற்றிய புகைப்படம் மிகவும் வைரலானது. இதை தொடர்ந்து இன்று இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ள நிலையில், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அமீர் கானின் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலமாக தங்களுடைய வாழ்த்துக்களை இரா மற்றும் நுபுர் ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Next Post

பிரபல கிரிக்கெட் வீரர் நிர்வாண போட்டோ வெளியிட்டதால் பரபரப்பு!!

Sat Nov 19 , 2022
கிரிக்கெட் வீரர் ஒருவர் நிர்வாண போட்டோ பதிவிட்டதால் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் ஷாப்பிங்மால் ஒன்றில் முழு நிர்வாணமாக நிற்பது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் IPL போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரே ரசல் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. சிக்கிட்டியே சேகரு!! : இவரின் இந்த பதிவுக்கு […]

You May Like