’தி காட் பாதர்’ படத்தில் நடித்த பிரபல நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
கடந்த 1973ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’தி காட் பாதர்’ படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது சார்பாக மேடையில் ஏறிய சச்சின் லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரித்து காட்டியிருப்பதை எதிர்த்து பிராண்டோ தனது விருதை மறுத்துவிட்டதாக அறிவித்திருந்தார்.
![மார்பக புற்றுநோய்..!! பிரபல நடிகை திடீர் மரணம்..!! ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/sacheen-littlefeather-who-declined-oscar-of-marlon-brando-dies-photos-pictures-stills.jpg)
இதனால், அவர் மீது அனைவரும் கோபமுற்று தாக்குதல் நடைபெறும் அளவிற்கு சென்றது. அதன்பின் 65 ஆண்டுகள் கழித்து ஆஸ்கர் நிர்வாகம் சச்சின் லிட்டிலிடம் மன்னிப்பும் கேட்டது. இந்நிலையில், சச்சின் லிட்டில் ஃபெதர், உடல்நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார். இவரது மரணம் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மார்பக புற்றுநோய் உட்பட பல பிரச்சனைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.