fbpx

நம்பவே முடியவில்லை..!! உயிர்பிரியும் சமயத்தில் மகன் செய்த காரியம்..!! நடிகர் ரவிச்சந்திரனுக்கு நடந்த அதிசயம்..!!

50, 60-களில் திரைத்துறைக்கு வந்த நடிகர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையின் காரணமாகவே சினிமா, நாடகம் என்று திரை வாழ்க்கையை தேடி வருவார்கள். ஆனால் நல்ல படிப்பு, ஓரளவு நல்ல குடும்ப சூழ்நிலை இருந்தும் சினிமா மீதுள்ள மோகத்தால் நடிக்க வந்தவர் தான் நடிகர் ரவிச்சந்திரன்.

நடித்த முதல் படமான காதலிக்க நேரமில்லை படத்தின் மூலமாக நடிகர் என்ற அந்தஸ்தை சுலபமாக பெற்றார் ரவிச்சந்திரன். பின்னர், தொடர்ச்சியாக சில வெள்ளி விழா படங்களை கொடுத்து முன்னனி நடிகராக திகழ ஆரம்பித்தார். அதே நேரத்தில் எம்ஜிஆருடன் பாசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் தான் நடிகை ஷீலா. இந்த படத்தில் நடிக்கும் போதே கேரளா சினிமா இவரை வரவேற்க தொடங்கியது. வெம்மீன் என்ற தலைசிறந்த படத்தில் நடித்ததன் மூலம் கேரளாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தார். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா நடித்த இதயக்கமலம் படத்திலும் ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் படத்தில் துணை நடிகையாக நடித்தவர் தான் ஷீலா. இதனால் ரவிச்சந்திரனுக்கும் ஷீலாவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

நம்பவே முடியவில்லை..!! உயிர்பிரியும் சமயத்தில் மகன் செய்த காரியம்..!! நடிகர் ரவிச்சந்திரனுக்கு நடந்த அதிசயம்..!!

ரவிச்சந்திரன் ஏற்கனவே திருமணமானவர் என்றாலும், இவர்களின் காதல் முற்றிக் கொண்டே போனது. ஒரு சமயத்தில் ஷீலாவையும் திருமணம் செய்து இரு குடும்பமாக தனித்தனியே பார்த்து வந்தார் ரவிச்சந்திரன். பின் ஷீலாவுக்கு ஜார்ஜ் என்ற மகன் பிறந்தார். அவர் தான் இப்போது ஏகப்பட்ட டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் நடித்து வரும் பிரபலமான நடிகர். ஒரளவுக்கு மேல் ஈகோ காரணமாக ரவிச்சந்திரனும் ஷீலாவும் பிரிந்து வாழத்தொடங்கினர். ஜார்ஜ் அவரது தாயான ஷீலாவுடன் சென்று விட்டார். நாட்கள் செல்ல செல்ல ரவிச்சந்திரனுக்கு வியாதி, சர்க்கரை நோய் என நோய்கள் தொற்றிக் கொள்ள ஒரு கட்டத்தில் மரண படுக்கைக்கு சென்றார். ஆனால் இவர் மனதிற்குள் மகன் ஜார்ஜ் பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

நம்பவே முடியவில்லை..!! உயிர்பிரியும் சமயத்தில் மகன் செய்த காரியம்..!! நடிகர் ரவிச்சந்திரனுக்கு நடந்த அதிசயம்..!!

உறவினர்கள் அனைவரும் வந்து பார்க்க இருந்தாலும் அவர் மனம் ஏதோ ஒன்றை ஏங்குவதாக உறவினர்கள் அறிந்து மகன் ஜார்ஜை வரவழைத்துள்ளனர். மகன் ஜார்ஜை பார்த்ததும் கையை பிடித்துக் கொண்டு அதுவரை பேச்சு சைகை இல்லாத ரவிச்சந்திரன் கண்களில் இருந்து தார தாரையாக கண்ணீர் வந்துள்ளது. இதை பார்த்துக் கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியத்தில் ஜார்ஜின் கையை பிடித்துக் கொண்டு அழத்தொடங்கியுள்ளனர். அதன் பின் இரண்டு நாட்கள் கழித்து ரவிச்சந்திரன் காலமானார்.

Chella

Next Post

#விருதுநகர் : தந்தையே மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொடூரம்..!

Sun Dec 18 , 2022
விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள ராஜபாளையத்தில் 54 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் வருகிறார் கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  இது பற்றி ராஜபாளையம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் சமீபத்தில் வழக்கினை விசாரித்த […]

You May Like