90-களில் தமிழ்த் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை கெளதமி. குரு சிஷ்யன் திரைப்படம் மூலம் தமிழில் என்ட்ரியான கெளதமி, அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார் என 90-களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
ஒரு நேரத்தில் காஸ்ட்லியான நடிகையாக வலம் வந்த கவுதமி, இன்று பெரியளவில் வருமானம் இல்லாமல் இருக்கிறாராம். சென்னை, விசாகப்பட்டிணம், ஹைதராபாத் பகுதிகளில் சொந்தமாக வீடு வைத்துள்ளாராம் கெளதமி. இதனுடன் சேர்த்து மொத்தமாக அவரது சொத்து மதிப்பு 50 கோடி வரை தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. 90-களில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிய கெளதமி, தற்போது 50 கோடி மட்டுமே சொத்துடன் வாழ்ந்து வருவது திரையுலகில் அதிர்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது.
அதேபோல், தற்போது ரேஞ்ச் ரோவர், BMW ரக கார்களை சொந்தமாக பயன்படுத்தி வருகிறாராம். நடிப்பு தவிர காஸ்ட்யூம் டிசைனிங்கிலும் கவனம் செலுத்தி வரும் கெளதமி, அதற்காகவும் தனியாக ஒரு நிறுவனம் நடத்தி வருகிறாராம். அதன்மூலம் மாதம் 5 லட்சம் வரை வருமானம் வருவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும், இதுகுறித்து முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.