fbpx

நடிகர் ஜெயராமுக்கு ”சிறந்த விவசாயி” என்ற விருதை வழங்கி கவுரவித்த முதல்வர்..!

கேரள மாநில விவசாய துறை சார்பில் நடைபெற்ற விவசாய தின விழாவில் நடிகர் ஜெயராமுக்கு ‘சிறந்த விவசாயி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

80 மற்றும் 90 களில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம். தற்போது முக்கியமான ரோல்கள், வில்லன் கதாபாத்திரம், துணை நடிகர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழிலும் தனது கவனத்தை செலுத்தி வரும் ஜெயராம், கதையை பொறுத்து சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இவரது மகன் காளிதாஸூம் இப்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் காளிதாஸ் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்த ‘பேப்பர் ராக்கெட்’ சீரீஸ் பாராட்டுக்களை வாரி குவித்துள்ளது.

நடிகர் ஜெயராமுக்கு ”சிறந்த விவசாயி” என்ற விருதை வழங்கி கவுரவித்த முதல்வர்..!

நடிகர் ஜெயராம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார். இந்த பண்ணைக்கு ஆனந்த் பண்ணை என்று பெயரும் வைத்துள்ளார். சுமார் 8 ஏக்கர் நிலத்தில் 60-க்கும் மேற்பட்ட பசுக்களை ஜெயராம் தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். இதுக்குறித்த பல செய்திகள், பேட்டிகள் இணையத்திலும் வைரலாகியுள்ளன. இந்நிலையில், ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் கவுரவித்துள்ளார்.

நடிகர் ஜெயராமுக்கு ”சிறந்த விவசாயி” என்ற விருதை வழங்கி கவுரவித்த முதல்வர்..!

கேரள மாநில விவசாய துறை சார்பில் திருவனந்தபுரத்தில் 2 தினங்களுக்கு முன்பு விவசாய தின விழா நடைபெற்றது. இதில், சிறந்த விவசாயி என்ற விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஜெயராம் செய்து வரும் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இதில் பேசிய நடிகர் ஜெயராம் “பத்ம ஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார்.

Chella

Next Post

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..! ஆணையம் பரிந்துரைத்த முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?

Fri Aug 19 , 2022
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கிளர்ச்சி ஏற்படாமலே, அதற்கான தேவை இல்லாமலே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது என்றும் அப்போதைய தென்மண்டல ஐ.ஜி, நெல்லை சரக டி.ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட 17 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018ஆம் ஆண்டு பொதுமக்கள் தன்னெழுச்சியான போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியிருந்த கிராமங்களைச் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..! ஆணையம் பரிந்துரைத்த முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?

You May Like