fbpx

“CholasAreBack”..!! ’பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் தேதி எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு..!!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளம் கால்பதித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இத்திரைப்படம், புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம், ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வெற்றிப் படமாகவே பொன்னியின் செல்வன் கருதப்படுகிறது.

"CholasAreBack"..!! ’பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் தேதி எப்போது..? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது படக்குழு..!!

முதல் பாகமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்களிடயே எழுந்து வந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Chella

Next Post

’2023இல் மிகப்பெரிய சம்பவம் இருக்கு’..!! வேலையிழப்புகள் அதிகரிக்கும்..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Wed Dec 28 , 2022
2023ஆம் ஆண்டு உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் (CEBR) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து நாடுகளின் மொத்த பொருளாதாரம் 100 ட்ரில்லியனை 2022இல் கடந்து உள்ளோம். இது நல்ல விஷயம். ஆனால், […]
’2023இல் மிகப்பெரிய சம்பவம் இருக்கு’..!! வேலையிழப்புகள் அதிகரிக்கும்..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

You May Like