fbpx

நீதிமன்றத்திற்கு சென்ற ”கோப்ரா”..! நீதிபதி பிறப்பித்த உத்தரவால் சிக்கல்.!

’கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், சியான் விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்றத்திற்கு சென்ற ”கோப்ரா”..! நீதிபதி பிறப்பித்த உத்தரவால் சிக்கல்.!

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில் மிகுந்த பொருட்செலவில் பல போராட்டங்களுக்கு பிறகு படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், திரைக்கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, ’கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

கேரளாவில் நிலச்சரிவு.. தொடர் மழை எதிரொலி; வீடு மண்ணில் புதைந்து ஒருவர் பலி.. நாலு பேரை தேடும் பணி தீவிரம்..!

Mon Aug 29 , 2022
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் மலையோரம் உள்ள கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் குடையாத்தூர் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. […]

You May Like