ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளியை உடனடியாக தண்டிக்க வேண்டும் என நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி டுவிட்டரில்பதிவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை பரங்கி மலை ரயில் நிலையத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு சதீஸ் என்பவர் கொலை செய்தார். பின்னர் தப்பி ஓடிய அவரை 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசான அவரது தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே நேரத்தில் கல்லூரி மாணவியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் தமிழகமே கொதித்து போயிருந்தது.
இதைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனியும் டுவிட் செய்துள்ளார். ’’ சத்யாவைக் கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை பொறுமைாயாக விசாரித்து 10 வருடத்திற்க பின்னர் தூக்கில் போடாமல் , தயவு செய்து உடனே விசாரித்து , ரயிலில் தள்ளிவிட்டு தண்டிக்கும் படி சத்யாவின் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் ’’ என பதிவிட்டிருந்தார்.
இதனிடையே டாக்டரும் , நடிகையுமான ஷர்மிளா அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன சார் வித்தியாசம் முதலில் விஷமத்தனமான ஆண்மைத்தனமையை கொச்சைபடுத்துவதை விடுங்க்ள நாம் அன்றாடம் சமூகத்தில் பார்க்கும் நுட்பமான பாலின பாகுபாட்டிற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.. பெண்கள் மீதான அணுகுமுறையில்மாற்றம் தேவை ’’ என பதிவிட்டிருக்கின்றார்.