fbpx

’தளபதி 67’ அப்டேட்..! மாஸ் வில்லன்களை களமிறக்கும் லோகேஷ்..! மிரள வைக்கும் விஜய் லுக்..!

’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ’வாரிசு’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் நடந்து முடிந்தது. பின்னர், சண்டைக் காட்சிகளுடன் கூடிய படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மூன்றாம் கட்டமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. அந்த லீக் ஆன வீடியோவில் உயிருக்குப் போராடும் நிலையில், உள்ள சரத்குமாரை மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. காட்சியில் விஜய், பிரபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

’தளபதி 67’ அப்டேட்..! மாஸ் வில்லன்களை களமிறக்கும் லோகேஷ்..! மிரள வைக்கும் விஜய் லுக்..!

ஏற்கனவே படத்திலிருந்து முக்கிய காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனதால், மீண்டும் இதுபோல் சம்பவம் நேரக்கூடாதென இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்படி இருந்தும் படத்தின் சில சண்டைக் காட்சி மற்றும் விஜய் மற்றும் ராஷ்மிகா நடனமாடும் காட்சிகள் இணையத்தில் கசிந்து படக்குழுவை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விஜய் சென்னை திரும்பியுள்ளார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் படத்தின் மொத்த காட்சிகளையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகை அன்றும் படத்தின் டீசர் ஆங்கில புத்தாண்டு (1.1.2023) அன்றும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

’தளபதி 67’ அப்டேட்..! மாஸ் வில்லன்களை களமிறக்கும் லோகேஷ்..! மிரள வைக்கும் விஜய் லுக்..!

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

’தளபதி 67’ அப்டேட்..! மாஸ் வில்லன்களை களமிறக்கும் லோகேஷ்..! மிரள வைக்கும் விஜய் லுக்..!

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரித்விராஜ், இந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் ஆகியோர் பேசப்பட்டு வருவதாகவும், கேங்ஸ்டர் கதைக்களத்தைக் கெண்ட இந்த படத்தில் விஜய் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கப்போவதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

தெரு நாய் யாரையாவது கடித்தால்.. அவற்றிற்கு உணவு அளிப்பவர்களே பொறுப்பு!... சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

Mon Sep 12 , 2022
புதுடெல்லி: தெருநாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு சோறு போடுபவர்களே பொறுப்பாவார்கள். தெருநாய்க்கு தடுப்பூசி செலுத்தும் செலவையும், சோறு போடுபவர்களே ஏற்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளாவில் தெரு நாய்கள் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும், அதை கட்டுப்படுத்த உத்தரவிடக் வேண்டும் என்றும் வழக்கறிஞர் வி.கே.பிஜூ சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்கடியால் எட்டு பேர் இறந்துள்ளனர். சமீபத்தில் 12 வயது […]

You May Like