fbpx

சர்ச்சையில் சிக்கிய ’’லவ் டுடே’’ ப்ரதீப்… இசையமைப்பாளர் ’யுவனை’ கன்னா பின்னானு திட்டி பதிவு…!!

’லவ்டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்ட ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகின்றது.

கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’லவ் டுடே’.  ’கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அவரின் பாடல்களும் பின்னணி இசையும்தான் லவ் டுடே வெற்றிக்கு பலமாக அமைந்தது என கூறலாம். இந்நிலையில், ப்ரதீப் ரங்கநாதன் முகநூல் பக்கத்தை ஆராய்ந்த ரசிகர் ஒருவர் கடந்த 2010ம் ஆண்டு இசையமைப்பாளர் யுவனை குறிப்பிட்டு ’’யுவன் ஒரு தண்டம், ஃப்ராடு’ என திட்டி பதிவிட்டதை பகிர்ந்திருக்கின்றார். அதைத் தொடர்ந்து இணையவாசிகள் பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியாகி நடிகர் அஜித் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம். இதில் இசை காப்பியடிக்கப்பட்டது என்பது போன்ற யூடியூப் வீடியோவையும் பகிர்ந்திருக்கின்றார். இதனால் கடந்த 24 மணி நேரமாக சர்ச்சையில் சிக்கி குழப்பத்தில் உள்ளார் ப்ரதீப் ரங்கநாதன்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுகரையும் சில பிரபல கிரிக்கெட் வீரர்களையும் திட்டி வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சமீபத்தில் ’’ஸ்ட்ரிக்டான ஒரு தந்தை கதாபாத்திரத்தை காட்ட எனக்கு ஒரே ஒரு ஷாட்தான் தேவைப்பட்டது. ஒரு நாமம் மிகவும் பெர்ஃபெக்டாக வைக்கும்போது அவர் ஆர்த்தடாக்ஸ் குடும்பம், மிகவும் பெர்ஃபெக்டான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை காட்டலாம்’’ என தனியார் யூடியூப்பிற்கு அளித்தபேட்டி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இரண்டாவது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

Next Post

இந்திய அளவில் 9 முறை டைட்டில் வென்ற கூடைப்பந்தாட்ட வீரர் காலமானார்!!

Wed Nov 16 , 2022
அறுபது, எழுபதுகளில் நட்சத்திரமாக ஜொலித்த மும்பையைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அப்பாஸ் மூன்டாசார் காலமானார். மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் அப்பாஸ் மூன்டாசார். 82 வயதாகும் இவர் 60, 70 களில் கூடைப்பந்தாட்டத்தின் நட்சத்திரமாக ஜொலித்தவர். ஹல்க் திரைப்படத்தில் ஜைஜாண்டிகான உருவம் மற்றும் நசீப் திரைப்படத்தில் உயரமான குத்துச்சண்டை வீரராக வலம் வரும் அமித்தாப்பச்சனுக்கு முன் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்றால் […]

You May Like