பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளர்களாக களமிறங்கப்போகும் பிரபரலங்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. எப்போதும் போல இந்த சீசனும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், பிக்பாஸ் சீசன் 6இல் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இதில் 9 ஆண் போட்டியாளர்களில் 4 போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முதலாவதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் தொடரில் ராகவன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யா கலந்து கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து தொகுப்பாளர் ரக்சன், சூப்பர் சிங்கர் ஷாம் விஷால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், சினிமா நடிகர் மற்றும் பாடகி சுஜித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பிக்பாஸ் சீசன் 6-இல் போட்டியாளராக பங்கு பெறுகிறார். அசுரன், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்த டி ஜே அருணாச்சலம் இப்போட்டியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் ரஞ்சித் மற்றும் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து ஆகியோர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதில், மாடலிங் துறையில் இருந்து அஜய் மெல்வின் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால், இந்த சீசன் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் டிவி தனது டிஆர்பியை ஏற்றுவதற்காக பிக்பாஸ் சீசன் 6இல் ஒவ்வொரு போட்டியாளரையும் தேடிப்பிடித்து தேர்ந்தெடுத்துள்ளனர். இப்போதே பிக்பாஸ் சீசன் 6 சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.