மகள் ஐஸ்வர்யா இயக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு இருவருமே தங்களது பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஒரு புறம், நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற தொடர்ந்து படங்களை கொடுத்துள்ளார். மறுபுறம் ஐஸ்வர்யா, ஆல்பம் பாடல்களை இயக்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் படங்களை இயக்குவதில் களமிறங்கியுள்ளார். 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய அவர், தற்போது ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அதற்கு ‘லால் சலாம்’ என பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் அதர்வா நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவருக்கு பதிலாக தற்போது விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்முறையாக கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விக்ராந்தின் அப்பாவாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. முன்னதாக ரஜினியின் இளைய மகன் சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினியை வைத்து ’கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். தற்போது முதல் முறையாக ஐஸ்வர்யா, ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.