விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் தனலட்சுமி. இந்த சீசனானது விறுவிறுப்பாக நகர்ந்து செல்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்து வந்தவர் தனலட்சுமி. அந்தவகையில் 70 நாட்களுக்கு மேலாக அந்நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்த இவர் மொத்தமாக ரூ.11 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து தற்போது தனலட்சுமி புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதாவது கியா சோனட் கார் வாங்கி இருக்கும் தனலட்சுமி அதுகுறித்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக இந்த காரின் விலை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் எனவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.