பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகரும், பிரபல யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து, 7ஆவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். அந்தவகையில், பிக்பாஸ் 7வது சீசன் ஆகஸ்ட் மாதமே தொடங்கும் என சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்நிலையில், இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ள பிரபலங்கள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்தவகையில், விஜய் டிவி பிரபலங்களான தொகுப்பாளினி பாவனா, கலக்கப்போவது யாரு பிரபலம் நடிகர் சரத், மாகாபா, உமாரியாஸ் போன்றோர் போட்டியாளர்கள் லிஸ்டில் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வரிசையில் சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதனும் இணைந்திருப்பதாகத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அப்படி இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால், இந்த சீசன் ஆனது பரபரப்பாகவும், சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமலும் இருக்கும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.