fbpx

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

சின்னத்திரையில் நடன இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்த சாண்டி, தண்ணில கண்டம், கெத்து போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

இதற்கிடையே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சாண்டி, நல்ல எண்டர்டெய்னராக இருந்தார். அந்த நிகழ்சியின் முடிவில் முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டிச் சென்றார். சாண்டி மாஸ்டர் ரன்னர் அப்பாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தற்போது சாண்டி நேரம், பிரேம், கோல்ட் போன்ற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் படத்தில் நடன இயக்குநர் சாண்டி ஹீரோவாக நடித்து வருகிறார்.

சாண்டி மாஸ்டர் ஒரு எபிசோடுக்கு ரூ.50 ஆயிரம் ரூபாயை சம்பளமாக பெருவதாக கூறப்படுகிறது. தற்போது சாண்டி ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் நடனம் அமைத்து வருவதால் அவரின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. நடனம், நடிப்பு மற்றும் மாடலிங்கை பிரதான தொழிலாக வைத்திருக்கும் சாண்டி, பெரிதாக விலை உயர்ந்த காரோ, பைக்கோ வைத்திருக்கவில்லை என்றாலும், அவருக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

கண்டதும் வந்த கள்ளக்காதல் முறை தவறிய உறவில் பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்…..! கணவனுக்கு பயந்து இளம் பெண் செய்த பயங்கர செயல்…..!

Wed Jul 5 , 2023
சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்து இருக்கின்றனர். இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு […]

You May Like