கோவையைச் சேர்ந்தவர் தர்ஷா குப்தா. நன்கு தமிழ் பேசத் தெரிந்த பெண்ணான இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வந்தார். ஆனால், ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். இந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷா குப்தா, அந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். இதையடுத்து சினிமா வாய்ப்புகளைப் பிடிப்பதற்காக படிப்படியாக கிளாமர் ரூட் பக்கம் சென்ற தர்ஷா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி மிரள வைத்தார்.

கவர்ச்சி போட்டோஷூட்டின் பலனாக அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், அவர் நடிப்பில் இதுவரை ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் கடைசியாக வெளிவந்த ஓ மை கோஸ்ட் படத்தில் தான் சன்னிலியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் அதகளப்படுத்தி இருந்தார் தர்ஷா. இதற்கு அடுத்தபடியாக அவர் நடிப்பில் மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.
இப்படி சினிமாவில் பிசியாகிவிட்டாலும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்துவதை கைவிடாத தர்ஷா, தொடர்ந்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது கடற்கரையோரம் மணலில் அமர்ந்தபடி டாப் ஆங்கிளில் டீப் கவர்ச்சி காட்டி போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். கவர்ச்சி புயலாக மாறி தர்ஷா குப்தா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள் அவரின் கவர்ச்சியை வர்ணித்து வருகின்றனர்.