நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் டேட்டிங் செய்வதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.. எனினும் தாங்கள் எப்போதும் நண்பர்கள் என்று இருவரும் வருகின்றனர், இருப்பினும் அவர்கள் டேட்டிங் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன..
இந்நிலையில் காஃபி வித் கரண் எபிசோடில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் கரண் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.. ராஷ்மிகாவும் தானும் நல்ல நண்பர்கள் என்று குறிப்பிட்டு, “என் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இரண்டு படங்களை ஒன்றாகச் செய்துள்ளோம். எனக்கு ராஷ்மிகாவை மிகவும் பிடிக்கும்.. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.. நாங்கள் திரைப்படங்கள் மூலம் பலவற்றைப் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு பிணைப்பு உருவாகிறது.”
ஏன் தனது உறவு நிலையை ஒருபோதும் வெளியிடுவதில்லை என்பதைப் பற்றிப் பேசிய விஜய் தேவரகொண்டா, “ என்னை நேசிக்கும் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. பலர் என்னை ஒரு நடிகராக நேசிக்கிறார்கள்.. எனது போஸ்டரை பலர் செல்போன்களில்.. ரசிகர்கள் எனக்கு அன்பையும் பாராட்டையும் தருகிறார்கள்; நான் அவர்களின் இதயங்களை உடைக்க விரும்பவில்லை..” என்று தெரிவித்தார்.
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், பிளாக் பஸ்டர் ஹிட்டானது.. மீண்டும் டியர் காம்ரேட் படத்தில் அவர்கள் இணைந்து நடித்திருந்தனர்.. இந்த நிலையில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ள லிகர் படத்தின் புரோமஷன் பணிகளில் விஜய் தேவரகொண்டா ஈடுபட்டு வருகிறார்.. மறுபுறம் ராஷ்மிகா, தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து வருகிறார்.. மேலும் மிஷன் மஜ்னு படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..