fbpx

பெற்றோரை விட்டு பிரியும் மகள்..!! 2-வது குழந்தைக்கு ரெடியான ரோபோ ஷங்கர்..!! ஆனால், இதுதான் பிரச்சனை..!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் என்ட்ரி கொடுத்து ஒரு காமெடி நடிகராக, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் ரோபோ ஷங்கர். இவருடைய சின்னத்திரை பயணம் ‘அசத்தப்போவது யாரு’ என்கிற நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக துவங்கியது. பின்னர் ஒரு சில படங்களில் சைடு ஆட்டிஸ்ட்டாக மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் என்பதை தாண்டி, இவரை பிரபலமாகியது ரோபோ ஷங்கரின் மிமிக்கிரி திறமை தான்.

விஜய் டிவி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ரோபோ ஷங்கர், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம் நடன திறமையையும் வெளிப்படுத்தினார். பின்னர் மாரி படத்தின் மூலம் மெயின் காமெடி ரோலில் தனுஷுடன் நடித்து அசத்திய ரோபோ ஷங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் அவருக்கு நண்பனாகவும் நடித்திருந்தார்.

இடையில் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைக்க முயற்சி செய்த ரோபோ ஷங்கருக்கு, மஞ்சள் காமாலை வந்ததால் சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பியதாக உருக்கமாக பேசி இருந்தார். இந்நிலையில், இவர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையை பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளது மட்டும் இன்றி, இதற்கு இடையில் இருக்கும் பிரச்சனை குறித்தும் பேசி இருந்தார்.

வனிதா விஜயகுமார் தான் ரோபோ ஷங்கர் மற்றும் அவரின் மனைவியை பேட்டி எடுத்திருந்தார். அப்போது மஞ்சள் காமாலை வந்ததில் இருந்து, அதற்கான சிகிச்சை எடுக்க உதவியவர்கள் என அனைவர் பற்றியும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து… நன்றி தெரிவித்திருப்பார் பிரியங்கா ரோபோ ஷங்கர். அந்த பேட்டியில் வனிதா இரண்டாவது குழந்தை பற்றி பேசுகையில், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருக்கிறது. அதற்கு முயற்சி செய்து வருகிறேன். ஆனால், தான் இரவு நேரத்தில் ஷூட்டிங் சென்று விடுவதால் அதுக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் அவருடைய முறை மாமானோடு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை குறித்து, ரோபோ ஷங்கர் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

மோசமான கேப்டன் ரோகித் சர்மா என்று கூற முடியாது - மைக்கேல் கிளார்க்

Tue Jun 20 , 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து ரசிகர்கள் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கேப்டன் பொறுப்பிலிருந்து அவரை மாற்ற வேண்டும் என பல தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு பெரும் அழுத்தத்தில் இருந்துவரும் ரோகித் சர்மா தன்னுடைய கேப்டன் பொறுப்பை துறக்கும் முடிவிற்கு வந்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும் உலகக் […]

You May Like