தமிழ் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்ய தர்ஷினி (DD). இளம் வயதில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவரது பயணம் இப்போது வரை வெற்றிகரமாக இருந்து வருகிறது. விஜய் டிவியில் ஏகப்பட்ட ஹிட் ஷோக்கள், பிரபலங்களின் Concert, தனியார் நிகழ்ச்சிகள், இசை, ட்ரைலர் வெளியீடு என தொடர்ந்து தனது தொகுப்பாளினி வேலையை சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறார்.
அண்மையில் காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அதிக நிகழ்ச்சிகளில் வராமல் இருந்த டிடி இப்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கலக்கி வருகிறார். DDStyles மூலம் தனியாகவும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது தொகுப்பாளினி டிடி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதாவது அவர் மீண்டும் விஜய் டிவியில் ஒரு சூப்பரான நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம். அது வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை, அவர் இதற்கு முன் நடத்திய ”என்கிட்ட மோதாதே” நிகழ்ச்சி தானாம். ஆனால், இந்நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாக போகிறது, எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.