ராமராஜன் நடிப்பில் வெளியான “வில்லுபாட்டுக்காரன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராணி. இவர் தெலுங்கு சினிமாவில் முதலில் தயாரிப்பாளராகத்தான் அடியெடுத்து வைத்தாராம். அதன்பின் நடிகையாக தமிழில் உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு என சிலமொழி படங்களில் நடித்து இவர் பிரபலமடைந்தார். இவருக்கு தமிழில் அனைவராலும் பாராட்டப்பட்ட படமாகவும் அனைத்து தரப்பினரிடையே இவரின் புகழுக்கு உறுதுணையாக இருந்த திரைப்படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி சரத்குமார் நடித்த “நாட்டாமை” திரைப்படம் தான்.

இப்படத்தில் டீச்சராக நடித்த இவர், அனைவராலும் நாட்டாமை டீச்சர் என்றே அழைக்கப்பட்டார். இவர் பல பேட்டிகளில் நாட்டாமை படம்தான் எனக்கு மிகப்பெரிய மைல்கல் என்று அடிக்கடி கூறுவார். இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்திலும் ‘ஓ போடு’ பாடலுக்கு நடனமாடியிருப்பார். ராணி 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராணி, தற்போது ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், திரைப்படங்களில் நடிப்பதைவிட குடும்பத்தை கவனிப்பதே எனது முக்கிய பொறுப்பு என்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது பயங்கர வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த படத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் இப்பொழுதும் கவர்ச்சி காட்டி வருகிறார்.