தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 18 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்துவிட்டனர். ஆனால், இதுவரை விவாகரத்துப் பெறவில்லை. அண்மையில் இருவரும் கோர்ட்டில் விவாகரத்துக்கும் விண்ணப்பித்ததாக ஒரு தகவல் வெளியான நிலையில், அதுவும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. தன்னுடைய பேரன்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகத்தான் ரஜினி தனுஷிடம் போயஸ் கார்டனில் வீடு கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
சுமார் ரூ.150 கோடியில் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டியுள்ள நிலையில் பூமி பூஜை விழாவுக்கு ரஜினி குடும்பத்திலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. யாத்ரா, லிங்கா கூட கலந்து கொள்ளவில்லை. மேலும், தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒருவர் மீது ஒருவர் கோபமாக இருக்கும் நிலையில் உடனே மனம் மாறுவதற்கு தயாராக இல்லையாம். அதனால் சில காலப்பிரிவுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து வாழலாம் என தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி வருகின்றனர்.