fbpx

ஆசிரியர் சமூகத்தை அவமதித்த தனுஷ்..!! கடைசி நேரத்தில் முதல்வரிடம் சென்ற புகார்..!! ’வாத்தி’ படத்திற்கு புதிய சிக்கல்..!!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ’ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த 8ஆம் தேதி வெளியாகியது. கல்வி வணிக மயம் குறித்து இந்தப் படம் பேசியுள்ளதாக தெரிகிறது. அதை கதையின் நாயகன் எப்படி அணுகுகிறார் என்பதுதான் கதைக்களம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு ஆசிரியர்களின் மாண்பை குலைக்கும் விதமாக உள்ளதாக ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் விரைவில் (17-02-2023) திரைக்கு வர உள்ளது. அதற்கு… “வாத்தி” என்று பெயர் வைத்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது…! இதே படம் தெலுங்கில் ” சார்” என்ற பெயரில் வெளியாகிறது. தமிழில் மட்டும் தரக்குறைவான கொச்சையான வார்த்தையில் ஆசிரிய சமூகத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்படுகிறது. இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் “வாத்தியார்” என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல “சார்” என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்த காதல் ஜோடி..!! அதுவும் எப்படி தெரியுமா..? வீடியோ உள்ளே..!!

Wed Feb 15 , 2023
இளம்ஜோடி ஒன்று நீருக்கடியில் நீண்ட முத்தம் கொடுத்து 13 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்திருக்கிறது. பிப்ரவரி 14ஆம் தேதியான நேற்று உலகமெங்கும் காதலர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தென்னாப்ரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று காதலர் தினத்தன்று உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அதன்படி, தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த பெத் நீல் மற்றும் கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் க்ளூட்டியர் என்ற பெண்ணும் 4 […]
முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்த காதல் ஜோடி..!! அதுவும் எப்படி தெரியுமா..? வீடியோ உள்ளே..!!

You May Like