fbpx

’தனுஷ் என்னோட பையன்’..!! தனது தாயிடம் கதறி அழுத வில்லன் நடிகர் ரகுவரன்..!!

வில்லன், ஹீரோ, குணசித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை வியக்க செய்தவர் நடிகர் ரகுவரன். இவர், கேரள மாநிலம் கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து தந்தையின் தொழிலுக்காக தமிழ்நாட்டில் குடும்பத்தோடு குடிபெயர்ந்தார். இவர், 1982ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

அதை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்கள் தான் மாபெரும் ஹிட் அடித்தது. தமிழ் மட்டும் இன்றி இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் ரகுவரன் நடித்திருக்கிறார். தனது முதல் மலையாள திரைப்படமான “காக்கா” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரோஹிணியை காதலித்து 1996இல் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். பின்னர் ரோகினி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பின் அவர் மிகவும் தனிமையில் வாடினாராம். அப்போது, படங்களில் கூட கவனம் செலுத்தாததால் சில ஆண்டுகள் கேப் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தனிமையை போக்க குடிபோதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே, போதை பழக்கத்திற்கு அடிமை ஆனதால் உடல்ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு கடந்த 2008ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். இந்நிலையில், ரகுவரனின் தயார் கஸ்தூரி சக்குங்கல் சமீபத்திய பேட்டி ஒன்றில், ரகுவரன் குறித்து மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதாவது தனுஷுடன் ’யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் நடித்தபோது தனுஷ் என் மகன் போலவே இருக்கிறான் என அம்மாவிடம் கூறினாராம் ரகுவரன். அம்மா ஷூட்டிங் போகும்போதெல்லாம் வழி அனுப்பி வைத்தால் தான் செல்வாராம். அம்மா மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தாராம் ரகுவரன்.

Chella

Next Post

6 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்..!! 2 தொகுதிகளில் வெற்றியை ருசித்த பாஜக..!! காங்கிரஸ் ஊத்திக்கிச்சா..?

Fri Sep 8 , 2023
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதியம் 12 மணி நிலவரப்படி ஜார்கண்ட் மாநிலத்தின் டும்ரி தொகுதியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட […]

You May Like