வெளிநாடுகளில் அஜித்தின் ‘வலிமை’ படத்தைவிட தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படம் அதிகளவிலான வசூலை பெற்றுள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த 18ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 2022ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் தனுஷ் – நித்யா மேனனின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் ‘வலிமை’ படத்தைவிட வசூல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பிரான்சில் இந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் கமலின் ‘விக்ரம்’, விஜயின் ‘பீஸ்ட்’ படங்களை அடுத்து மூன்றாவதாக தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இடம் பிடித்துள்ளது. திரையரங்குகளில் இப்படம் வெளியாகி 11 நாட்களே ஆன நிலையில், இதுவரை 65 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. விரைவில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.