தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன் திலீப் குமார். இதுவரை 4 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். முதலில் நயன்தாரா, யோகிபாபுவை வைத்து எடுக்கப்பட்ட கோலமாவு கோகிலா திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் திரைப்படம் எடுத்தார். இப்படமும் செம ஹிட்டானது. தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை தயாரித்தார் நெல்சன். ஆனால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் படம் எடுத்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நெல்சன் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், நெல்சனின் மனைவி பாக்குறதுக்கு ஹீரோயின் போல் இருக்கிறார்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.