உதவி இயக்குநராக முதல் படியை தொட்ட ஒருவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை பிற்காலத்தில் சினிமாவில், தான் ஒரு பிரமாண்டமான இயக்குநராக கொண்டாடப்படுவார் என்பது. அப்படி தமிழ் திரையுலகமே வியந்து பார்க்கும் பிரம்மாண்டத்தை கொண்டு வந்து நிறுத்திய முதல் இயக்குநர் ஷங்கரின் (Director Shankar) 60-வது பிறந்தநாள் இன்று.
பிரம்மாண்டம் என்றாலே ஷங்கர் தான் என சொல்லும் அளவுக்கு தன்னுடைய பிரம்மாண்ட படைப்புகளால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார். டிப்ளமோ முடித்த இவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் முதலில் ஒரு சில படங்களில் நடித்தார். பின்னர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கரை தன்னுடைய படங்களில் பணியாற்ற அழைத்தார். இதையடுத்து, உதவி இயக்குநராக பணியாற்றிய ஷங்கர், கடந்த 1993ஆம் ஆண்டு இயக்குநராக அவதாரம் எடுத்தார்.
இயக்குனர் ஷங்கர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் ஜென்டில்மேன். முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை ருசித்த ஷங்கருக்கு, அடுத்ததாக காதலன் என்ற படத்தை இயக்கினார். இப்படத்திலும் வெற்றிகண்டார். தற்போது, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய 2 திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இப்படி திரையுலகில் 30 ஆண்டுகளாக தன்னுடைய பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்துவந்த இயக்குனர் ஷங்கர், இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்றால் அது ஷங்கர் தானாம். இந்தியன் 2 படத்திற்காக இவர் ரூ.50 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.150 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் மூலமும் இவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறதாம்.
சென்னை, மும்பையில் சொகுசு பங்களா உள்ளது. நவி மும்பையில் உள்ள ஷங்கரின் வீடு மட்டும் ரூ.6 கோடி இருக்குமாம். மேலும், ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார். இவரிடம் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் உள்ளது. அதன் மதிப்பு ரூ.3.65 கோடியாம். இந்த காருக்கு ஸ்பெஷல் நம்பர் பிளேட் வாங்கவே பல லட்சம் செலவு செய்தாராம். மேலும், அவரிடம் BMW காரும் உள்ளது.