தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. இவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு 2007இல் கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதோடு இவர் முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதன்பிறகு, அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இதனை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அங்காடி தெரு படத்தின் போது அஞ்சலி அனுபவித்த கஷ்டம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, வசந்த் பாலன் இயக்கத்தில் அங்காடி திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்திருந்தார். இந்த படத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவரும் பெண்கள், துணிக்கடையில் எவ்வாறெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் இயக்குநர் படம் எடுத்திருந்தார்.
இந்த படத்தில் அஞ்சலியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதுவும் கிளைமாக்ஸ்ல் இவருடைய காட்சி பார்ப்போரையே கலங்க வைத்துவிட்டது. இதற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருதும் கிடைத்தது. மேலும், வசந்த் பாலன் படப்பிடிப்பு தொடங்கிய போது அஞ்சலிக்கு நாட்கள் செல்ல செல்ல இயக்குநர் வசந்த் பாலன் படப்பிடிப்பில் செய்யும் விஷயங்கள் பிடிக்காமல் போனது. குறிப்பாக, பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க வைத்து அவர் எடுத்த காட்சிகள் பிடிக்கவில்லை.
இதனால் அஞ்சலி இயக்குனர் மீது கோபம் கொண்டார். ஆனால், படம் வெளியான பிறகு அந்த சீன்களை பார்த்து அவர் மனம் மாறிவிட்டாராம். இந்த படம் தான் அஞ்சலி திரை வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது