fbpx

ஜெமினி கணேசனுக்கு ”சாம்பார்” என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இதோ இப்படிதான்..!

ஜெமினி கணேசனுக்கு ’சாம்பார்’ என்ற பெயர் வந்ததற்கான காரணம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தமிழ் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவர்தான் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் கணபதி சுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர், இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது. இவர் வாழ்க்கையில் ஏகப்பட்ட பெண்கள், ஏகப்பட்ட மனைவிகள் என்று பலர் இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் வயதான நிலையில், கூட இவர் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசனுக்கு ”சாம்பார்” என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இதோ இப்படிதான்..!

பெண்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என அவரே பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அந்த வகையில், காதல் மன்னன் என்ற பட்டம் இவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த காலத்தில் இவருக்கு சாம்பார் என்ற மற்றொரு பெயரும் கூட உண்டு. ஆம், இவருடைய பெயரை குறிப்பிடாமல் ரசிகர்களும், மக்களும் சாம்பார் என பரவலாக அழைத்து வந்தனர். இதற்கு காரணம் அப்பொழுது அவர் பெயரைக் கெடுப்பதற்காக சிலர் அந்த பெயரை பயன்படுத்தி அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அவரை சாம்பார் என்று அழைப்பதற்கான காரணமே வேறு.

ஜெமினி கணேசனுக்கு ”சாம்பார்” என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இதோ இப்படிதான்..!

அதாவது, ஜெமினிக்கு காதல் படங்கள் தான் நிறைய வெற்றிகளை கொடுத்திருக்கிறது. அதுதான் அவருக்கு பொருத்தமாகவும் இருந்திருக்கிறது. ஆனால், அவர் அதை விட்டுவிட்டு ஆக்சன் காட்சிகள் கொண்ட சண்டை படங்களில் அதிகமாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் தான் மக்கள் அவருக்கு வெற்றியைத் தரும் காதல் படங்களில் நடிக்காமல் சாம்பார் போல தேவையில்லாமல் சண்டை படங்களில் நடித்து பெயரை கெடுத்துக் கொள்கிறார் என்று கூறி வந்தனர். அதன் பிறகு ரசிகர்களும் அவரை சாம்பார் என்று அழைப்பதே வாடிக்கையாக மாறிப்போனது.

Chella

Next Post

’உங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்’..! அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம்..!

Fri Aug 5 , 2022
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகையால் அன்றைய நாள், பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், போதையின் தீமைகள் குறித்த காணொளிக் காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தங்களுக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படும். […]

You May Like