கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்தது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் 2ஆம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் படத்தில் சொல்லப்பட்ட கேள்விகளுக்கான விடையாக இரண்டாம் அமைந்துள்ளது.
இந்நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்ற பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரப்படி 58 – 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் ரூபாய் 300 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.