பிரபலங்களின் பிறந்தநாள் வரும் போது அவர்களை பற்றி நமக்கு சில தெரியாத விஷயங்கள், சொத்து மதிப்பு போன்ற விவரங்கள் கடந்த சில வருடங்களாக அதிகம் வெளியாகி வருகிறது. அந்தவகையில், ஜூன் 1ஆம் தேதி தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மாதவன் குறித்த சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாலிவுட்டில் சீரியல்களில் நடித்து வந்த மாதவனுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது தான் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம்.
அப்படத்தின் மூலம் தமிழக மக்களால் சாக்லெட் பாயாக கொண்டாடப்பட்ட மாதவன், கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜேஜே, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றிகளை கண்டார். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராக வலம் வரும் மாதவனின் சொத்து மதிப்பு ரூ. 105 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் ரூ. 18 கோடி மதிப்பில் ஒரு வீடு இருக்கிறது. ஒரு படத்துக்கு ரூ. 6 முதல் ரூ. 8 கோடி வரை சம்பளம் பெறும் மாதவன், விளம்பரங்கள் மூலமாகவே ரூ. 1 கோடி வரை வருவாய் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.