fbpx

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மிக்சர் குயின்ஸிக்கு விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ள குயின்ஸியின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணமே கமல்ஹாசன்தான். அவர் தொகுத்து வழங்கிய விதம் மக்களுக்கு பிடித்துப்போனதால், முதல் சீசனில் இருந்து தற்போது நடைபெற்று வரும் 6-வது சீசன் வரை அவர் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்த 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது பாதி கட்டத்தை தாண்டியுள்ளது. அதாவது 50-வது நாளை கடந்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் உள்ளனர். அதிலும் இந்த வாரம் குயின்சி எலிமினேட் ஆகிவிட்டதால் 13 பேர் மட்டுமே உள்ளனர். 

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மிக்சர் குயின்ஸிக்கு விஜய் டிவி கொட்டிக் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பிக்பாஸ் வீட்டில் எந்தவித வேலையும் செய்யாமல் ஜாலியாக வலம் வந்துகொண்டிருந்ததே குயின்ஸி எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணம். குயின்ஸியின் எவிக்‌ஷன் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், பிக்பாஸ் ரசிகர்களுக்கு சரியானதாகவே தோன்றி இருக்கும். இந்நிலையில், குயின்ஸியின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 8 வாரம் தங்கி இருந்துள்ளார் குயின்ஸி. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும். ஒரு வாரத்திற்கு ரூ.1.4 லட்சம் அளவுக்கு இவர் பெற்றிருக்க கூடும் என்பதால் மொத்தமாக இவர் தங்கிய 8 வாரத்திற்கு ரூ.11 லட்சத்துக்கு மேல் அவர் சம்பளமாக பெற்றிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Chella

Next Post

ஹச்.. என தும்மிய இளைஞர்.. சற்று நேரத்தில் பிரிந்த உயிர்.. அதிரவைக்கும் இளவயது மரணம்.!

Mon Dec 5 , 2022
உத்திரபிரதேசத்தில் உள்ள மீரட் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் இரவு நேரத்தில் தன்னுடைய நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் இளைஞருக்கு திடீரென தும்மல் வந்துள்ளது. உடனே அவர் தன் நண்பரின் தோள்களில் கையை போட்டபடி மிகவும் சோர்வாக நடந்து சென்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் அவர் சரிந்து விழுந்து மயங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை தூக்க முயற்சித்தனர். ஆனால் அவரால் […]

You May Like